நீ விழுந்து
நான் அழுது
உனக்கு மருந்திட்டு
எனக்கு குணமடைவது
காதல்
உதட்டை விட அதிகமாய் சிரித்த உன் கண்களுக்கும்
கண்களை விட அதிகமாய் பேசிய உன் இதயத்திற்கும்
இதயத்தை விட அதிகமாய் நேசித்த உன் உயிர்க்கு
பிடித்த ஓர் நினைவு
நான்
உன் கன்னகுழியில் நான் தந்த முத்தத்தின் ஈரம் காயும்முன்,
என் கண்ணுக்குழியில் நீ தந்த ஈரம்
நம் பிரிவு
உன்னிடம் சொல்ல நினைக்கும்
ஒரு நொடி தயக்கமும்
அழகிய வேதனை
காதல்
That split second heart stop while thinking
To tell or
Not to tell
Is love